11 Jan 2025

இன்றைய தேவாரம்




      
         பொய்யா நாவதனால் புகழ்வார்கள் மனத்தினுள்ளே 
         மெய்யே நின்று எரியும் விளக்கே ஒத்த தேவர்பிரான் 
         செய்யானுங் கரிய நிறத்தானும் தெரிவரியான்
         மையார் கண்ணியொடு மகிழ்வான் கழிப்பாலையதே.

    பொய் சொல்லாத நாவினால் புகழ்கின்றவர்களின் மனத்தின் உள்ளே உண்மையாகவே நின்று எரியும் திருவிளக்கைப் போன்றவன் சிவபெருமான். சிவந்த நிறமுடைய நான்முகனும், கரிய நிறமுடைய திருமாலும் தேடிக் காணப் பெறாதவன். அத்தகைய பெருமான், மைபூசிய கண்களைக் கொண்ட உமாதேவியோடு மகிழ்ந்திருக்கும் திருத்தலம் கழிப்பாலையாகும்.

No comments:

Post a Comment