பத்திமையும் பரிசும் இலாப்
பசு பாசம் அறுத்தருளிப்
பித்தன் இவன் என என்னை
ஆக்குவித்துப் பேராமே
சித்தம் எனும் திண் கயிற்றால்
திருப்பாதங் கட்டுவித்த
வித்தகனார் விளையாடல்
விளங்கு தில்லை கண்டேனே.
எனது பசுத் தன்மையையும், பாசத்தையும் நீக்கியருளி, அன்பும், பண்பும் இல்லாத பித்தன் இவன் என்று என்னை உலகினர் கூறும்படி செய்வித்து, அவனது திருவடியை விட்டு நான் விலகிப் போகாதவாறு நினைவு என்னும் வலிய கயிற்றினால் என்னைத் தன் திருவடியோடு சேர்த்துப் பிணைத்த ஆனந்தக் கூத்தனின் திருவிளையாடலைத் தில்லைத் திருச்சபையில் கண்டு களிப்படைந்தேன்.
No comments:
Post a Comment