12 Jan 2025

திருவாசகம் பாடல் மற்றும் அதன் பொருள்



 அருளுடைச் சுடரே அளிந்ததோர் கனியே
   பெருந் திறல் அரும் தவர்க்கு அரசே
    பொருளுடைக் கலையே புகழ்ச்சியைக் கடந்த
போகமே யோகத்தின் பொலிவே
            தெருளிடத்து அடியார் சிந்தையுள் புகுந்த
               செல்வமே சிவபெருமானே
   இருளிடத்து உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
               எங்கு எழுந்தருளுவது இனியே.

    கருணை ஒளி வீசும் சுடரொளியே, கனிந்த நல்ல பழம் ஒத்தவனே, பேராற்றல் கொண்ட அருந்தவத்தினர்க்கு அரசே, மெய்ப்பொருள் விளக்கும் மெய்ஞ்ஞான நூல் அனையவனே, புகழ்தலைக் கடந்த சிவ பரம்பொருளே, யோகத்தார் பெரும்பேறே, தெளிந்த அடியாரிடத்துத் தங்கிய அருட் செல்வமே, அறியாமை நிறைந்த இவ்வுலகத்தே உன்னை உறுதியாகப் பற்றினேன். இனி; நீ எழுந்தருள்வது எங்கே? எமை ஆண்டருள்க இறையே!

No comments:

Post a Comment