28 Oct 2013

திருஞானசம்பந்த சுவாமிகள் வரலாற்றுச் சுருக்கம்(Short Life story of thirugnanasambandar)

திருஞானசம்பந்த சுவாமிகள்
வரலாற்றுச் சுருக்கம்

சோழ நாட்டில் சீர்காழிப் பதியில் அந்தணர் மரபில் கௌணியர் கோத்திரத்தில் (சுமார் கி.பி. 638-ல்) சிவபாத இருதயர்க்கும், பகவதி அம்மையாருக்கும் மகனாகத் திருஞானசம்பந்தர் அவதாரம் செய்தார். தந்தையார் நீராடப் புறப்பட்டபோது மூன்று வயதுடைய பிள்ளையாரும் உடன் சென்றார். பிரம தீர்த்தத்தில் தந்தையார் மூழ்கி அகமருஷண ஜெபம் செய்யும் போது தந்தையைக் காணமாட்டாமல், பிள்ளையார் தோணிபுரச் சிகரம் பார்த்து 'அம்மே அப்பா' என்று அழுதருளினார்.

தோணியப்பர் இடப வாகனத்தில் உமையம்மையுடன் எழுந்தருளி, வந்து உமையம்மையைப் பாலளிக்குமாறு பணிக்க, உமையம்மையும் பொற்கிண்ணத்தில் திருமுலைப் பாலைக் கறந்து சிவஞானத்தையும் உடன் குழைத்து ஊட்ட, உண்டருளினார். அவ்வளவில் சிவனடியே சிந்திக்கும் திருப்பெருகு சிவஞானம் முதலிய அனைத்து ஞானங்களும் பெற்றுச் திருஞானசம்பந்தர் ஆயினார். நீராடிக் கரை ஏறிய தந்தையார் பிள்ளையின் வாயில் பால் வழியக் கண்டு, 'யார் அளித்த பாலை உண்டனை?' என வெகுள, அதற்கு விடையாகத் 'தோடுடைய செவியன்' என்ற பதிகத்தை அருளினார்.

      பின்பு சம்பந்தர் திருக்கோலக்காவுக்குச் சென்று பதிகம் பாடி இறைவனிட மிருந்து பொற்றாளம் பெற்றார். தமது தாயாரின் பிறப்பிடமான திருநனிபள்ளிக்குச் சென்று ஊர் எல்லையில் 'காரைகள் கூகை முல்லை' என்ற முதற் குறிப்புடைய திருப்பதிகத்தைப் பாடிப் பாலை நிலத்தை நெய்தல் நிலமாக ஆக்கினார். பின்பு சீர்காழியில் தங்கி இருக்கும் போது திருநீலகண்ட யாழ்ப்பாணர் வந்து வணங்க அவரோடு அளவளாவித் தம் பதிகங்களை யாழிலிட்டு இசைக்க அவர்க்கு அனுமதி தந்தார். யாழ்ப்பாணரும் அடியார்களும் சூழத் தில்லை முதலிய திருத்தலங்களை வழிபட்டுப் பதிகம் பாடிச் செல்லும் போது, திருநெல்வாயில் அரத்துறைக்கு அருகே மாறன்பாடி என்ற ஊரில் முத்துச் சிவிகை, முத்துக் குடை, முத்துச் சின்னம் ஆகிய மூன்றும் இறைவனால் அளிக்கப் பெற்றார். அப்போது. 'எந்தை ஈசன் எம்பெருமான்' எனத் தொடங்கும் திருப்பதிகம் பாடியருளினார்.

    பின்னர்ச் சீர்காழிக்குத் திரும்பி வந்து தங்கி இருக்கும்போது, தமது ஏழாம் வயதில் உபநயனச் சடங்கு நடந்த சந்தர்ப்பத்தில் அங்கு வந்திருந்த  வேதியர்களுக்  கெல்லாம்  வேத  நுட்பங்களை எடுத்தோதி

அவர்களது  ஐயங்களைப்  போக்கினார்.  மற்றும்  வேதப்   பயனான
திருவைந்தெழுத்தின் சிறப்புகளைப் புலப்படுத்தி 'துஞ்சலும் துஞ்சல் இலாத போழ்தினும்' என்ற பஞ்சாக்கரப் பதிகத்தை அருளினார். பின்பொருநாள் திருநாவுக்கரசர் சுவாமிகள் சீர்காழிக்கு வர அவரை வரவேற்று உடனுறைந்தார்.

    திருநாவுக்கரசர் சுவாமிகள் விடைப்பெற்றுச் சென்ற பிறகு திருஞானசம்பந்தர் பெருமான் சுவாமிகள் சோழநாடு முதலிய பல நாட்டுத் தலங்களைத் தரிசிக்க விரும்பித் தல யாத்திரை புறப்பட்டார். அடியார்கள் புடைசூழத் தலங்கள் தோறும் சென்று பதிகம் பாடி வழிப்பட்டார். 

    அங்ஙனம் தலயாத்திரை செய்யும் போது திருப்பாச்சில் ஆச்சிராமம் என்ற தலத்தில் கொல்லிமழவன் என்ற மனன்னின் மகளுக்கு இருந்த முயலகன் என்ற கொடிய நோயை 'துணிவளர் திங்கள்' என்ற பதிகம்பாடி அகற்றினார். திருக்கொடிமாடச் செங்குன்றூரில் அடியார்களுக்கு ஏற்பட்ட 'பனி' என்னும் குளிர் சுரத்தை 'அவ்வினைக்கு இவ்வினையாம்'  என்ற திருநீலகண்டப் பதிகம்பாடி அகற்றினார். பட்டீச்சரத்தை அடையும் போது வேனில் வெப்பம் தீரும் பொருட்டு இறைவனால் முத்துப்பந்தர் அளிக்கப் பெற்றார். திருத்தருமபுரம் என்ற தலத்தில் யாழ்ப் பாணரால் வாசிக்கமுடியாத அளவுக்கு 'மாதர் மடப்படி' எனத் தொடங்கும் யாழ்மூரிப் பண் பாடினார். 

திருச்சாத்தமங்கையில் திருநீலநக்க நாயனாரால் உபசரிக்கப்பெற்று அவரது இல்லத்தில் தங்கினார். திருச்செங்கொட்டங்குடியில் சிறுத்தொண்ட நாயனாரால் உபசரிக்கப்பெற்று அவரது மடத்தில் தங்கினார். திருமருகலில் பாம்பு தீண்டி இறந்த வணிகனை 'சடையா யெனுமால்' என்னும் பதிகம் பாடி உயிர்பெற்றெழச் செய்து அவ்வணிகனுக்கும் அவனுடன் வந்த நங்கைக்கும் திருமணம் செய்து வைத்தார். திருவாரூர் முதலிய தலங்களைத் தரிசித்துத் திரும்பித் திருப்புகலூரை அடைந்து, அங்கே முருக நாயனார் மடத்தில் தங்கி இருந்த திருநாவுக்கரசருடன் தாமும் சில நாள் தங்கினார். 

   பின்பு திருநாவுக்கரசரும் சம்பந்தரும் இணைந்து தலயாத்திரை தொடங்கிப் பல தலங்களை வணங்கித் திருக்கடவூரை அடைந்து குங்குலியக்கலய நாயனரின் திருமடத்தில் தங்கினார். அங்கிருந்து பல தலங்களை வழிபட்டுத் திருவீழிமிழலையை அடைந்து சில நாட்கள் தங்கினார். அப்போது பஞசம் ஏற்பட்டதால் அடியவர்கள் பசியால் 
துன்புற்றனர்.  அது  கண்ட  இருபெரும் சமயக் குரவர்களும் ஈசனை 

நினைந்து துயில் கொள்ளலாயினர். ஈசன், கனவில் தோன்றிப் பஞ்சம் தீரும் வரையில் படிக்காசு அளிக்கின்றோம் என்று அருள் செய்தனர். அவ்வாறே பீடத்தின் கிழக்குப் பகுதியில் ஒரு பொற்காசும், மேற்குப் பகுதியில் ஒரு பொற்காசும் ஆக இரு காசுகள் அளித்தனர். திருநாவுக்கரசர் திருமடத்தில் காலம் தாழ்த்தாது உணவு படைக்கப்படுதலும், திருஞான சம்பந்தர் திருமடத்தில் மாற்றுக் குறைந்த காசு பெற்றமையால் காலம் தாழ்த்தி உணவு படைக்கப் படுதலும் நடைபெற்று வந்தது. சம்பந்தர் பெருமான், தாம் பெற்ற காசு வாசியுடையதாக (குற்றம் உடையதாக) இருப்பதை அறிந்து, மாற்றுக் குறையாத நல்ல பொற்காசு அளித்தருளுமாறு இறைவனாரை வேண்டி 'வாசி தீரவே, காசு நல்குவீர்' என்ற பதிகம் பாடி வாசியில்லாக் காசு பெற்றார். பின்பு இருவரும் திருமறைக்காடு சென்றனர்.  அங்கே வேதத்தால் அடைக்கப் பெற்றிருந்த கதவுகளை திருநாவுக்கரசர் சுவாமிகள் 'பண்ணினேர் மொழியாள் உமை பங்கரோ' என்ற பதிகம் பாடி திறந்தார். திருஞானசம்பந்தர் சுவாமிகள் 'சதுரம் மறைதான்' என்ற திருப்பதிகம் பாடி அடைப்பித்தார்.

   பாண்டி நாட்டிலிருந்து மங்கையர்க்கரசியார் விட்ட அழைப்பிற்கு  இணங்கிச் சம்பந்தர் சுவாமிகள் புறப்பட்டபோது, 'நாளும் கோளும் நன்றாயமைய வில்லை' என நாவுக்கரசர் தடுக்கச் சம்பந்தர் 'வேயுறு தோளிபங்கன்' என்ற கோளறு பதிகம்பாடி நாவுக்கரசரிடம் விடைப்பெற்றுப் புறப்பட்டார். சம்பந்தர் மதுரை யடைந்து ஒரு மடத்தில் தங்கி இருக்க அம்மடத்திற்குச் சமணர்கள் தீ மூட்ட, அஃதறிந்த சம்பந்தர் 'செய்யனே திரு ஆலவாய்' என்ற பதிகம் பாடி அவ்வெப்பம் பாண்டிய மன்னனைப் பற்றுமாறு செய்தார். பாண்டியனின் வெப்பு நோயைத் தீர்க்க அம்மன்னின் வேண்டுகோளால் அரண்மனைக்குச் சென்று 'மந்திரமாவது நீறு' என்ற திருநீற்றுப் பதிகம் பாடி அவனுக்கு நீறுபூசி வெப்ப நோயை தணிவித்தார். சமணரோடு அனல்வாதம் செய்து 'போகமார்த்த பூண்முலையாள்' என்ற திருநள்ளாற்றுப் பதிகத்தை அனலில் இட்டு 'தளரிள வளரொளி' என்ற பதிகம் பாடி நெருப்பிலிட்ட ஏட்டை வேகாமல் இருக்கச் செய்தார். புனல் வாதத்தின்போது 'வாழ்க அந்தணர்' என்ற திருப்பாசுரம் பதிகம் பாடி ஏடு எதிர் செல்லுமாறு செய்தார். பாண்டிய மன்னனைச் சைவனாக்கிப் பாண்டி நாட்டில் சைவ சமயத்தை நிலை நாட்டினார். பின் பாண்டி நாட்டுத் தலங்களைப்  பதிகம்  பாடி  வழிபட்டு  இராமேஸ்வரத்தில் இருந்தவாறே 

ஈழநாட்டில்  உள்ள  திருக்கோணமலை,  திருக்கேத்தீச்சரம்  என்னும்
தலங்கட்குப் பதிகம் பாடினார்.  பின்பு  சோழநாடு  திரும்பினார். அங்ஙனம் திரும்பும்போது திருக்கொள்ளம்பூதூரில் வெள்ளம் பெருகிய ஆற்றில் கோலின்றி ஓடம் செல்லும்படி 'கொட்ட மேகமழுங் கொள்ளம் பூதூர்' என்ற பதிகம் பாடினார். திருத்தெளிச்சேரியை வழிபட்டுச் செல்லும்போது போதி மங்கை என்ற இடத்தில் பௌத்தர்களோடு வாதிட்டு வென்றார். திருபு;பூந்துருத்தியில் திருநாவுக்கரசர் பெருமானை மூன்றாம் முறையாகச் சந்தித்தார். 

   பின்பு தொண்டைநாட்டு யாத்திரையில் திருவோத்தூரில் 'பூத்தேர்ந் தாயன கொண்டுநின் பொன்னடி' என்ற பதிகம் பாடி ஆண்பனையைப் பெண்பனைகளாக்கினார். திருக்காளத்தியை வழிபட்டுத் தங்கி இருக்கும்போது அங்கிருந்தவாறே அதற்கப்பால் உள்ள திருக்கேதாரம், திருக்கோகரணம், திருப்பருப்பதம், திருஇந்திர நீலப்பருப்பதம், திருஅநேகதங்காபதம் ஆகிய தலங்கட்குப் பதிகம் பாடி பரவினார். பின் திருவெற்காடு, திருவொற்றியூர் ஆகிய தலங்களை தரிசித்து திருமயிலை வந்து சேர்ந்தார். அங்கு 'மட்டிட்ட புன்னையங் கானல் மடமயிலை' என்ற பதிகத்தை கபாலீசரை நினைந்து பாடி பூம்பாவை என்ற பெண்ணின் அஸ்தியை பெண்ணாக மாற்றினார். 

  பின்னர்ச் சீர்காழி திருமபினார். பெற்றோர்களின் விருப்பத்திற்கு இசைந்து திருநல்லூர்ப் பெருமணத்தில் திருமணம் புரிந்து கொண்டு, தம் மனைவியுடன் சுற்றம் சூழத் திருக்கோவிலுக்கு எழுந்தருளினார். கோயிலில் பெருஞ்சோதி தோன்றி வாயில் ஒன்றை வகுத்துக் காட்டியது. திருஞானசம்பந்தர் சுவாமிகள், 'காதலாகிக் கசிந்து' என்ற நமச்சிவாயத் திருப்பதிகம் ஓதித் தம்முடன் வந்தோரை எல்லாம் அச்சோதியுள் புகுமாறு சொல்லித் தாமும் தம் மனைவியுடன் சோதியுட் புகுந்து (கி.பி. 654ல்) வைகாசி மூல நாளில் இறைவன் திருவடியுள் ஒன்றி உடனானார்.  

திருச்சிற்றம்பலம்.

No comments:

Post a Comment