பெரும் பெருமான் என் பிறவியை
வேரஅறுத்துப் பெரும் பிச்சுத்
தரும் பெருமான் சதுரப் பெருமான்
என் மனத்தின் உள்ளே
வரும் பெருமான் மலரோன்
நெடுமால் அறியாமல் நின்ற
அரும் பெருமான் உடையாய்
அடியேன் உன் அடைக்கலமே.
வானவர் தலைவனே, என் பிறவியை வேரறுத்து, அருட்பித்தினை உண்டாக்கு கின்ற பெருந்திறலுடைய பெருமானே, என் சித்தத்துள் குடிகொண்ட சிவ குருவே, பிரமனும் திருமாலும் தேடி அலைந்தும் காணுதற்கு எட்டாத பரம்பொருளே, என்னை உடையவனே, அடியேன் உனது அடைக்கலம் ஐயனே காத்தருள்க.
No comments:
Post a Comment