தாமென்றும் மனம் தளராத் தகுதியராய் உலகத்துக்
காமென்று சரண்புகுந்தார்தமைக் காக்கும் கருணையினான்
ஓமென்று மறை பயில்வார் பிரமபுரத்து உறைகின்ற
காமன்றன் உடல்எரியக் கனல் சேர்ந்த கண்ணானே.
ஓம் என்று வேதம் பயிலும் அந்தணர் வாழும் சீர்காழியில், காமனின் உடல்எரிய நெற்றிக் கண்ணால் அழித்த சிவபெருமான் தங்கியுள்ளான். அவன், மனம் தளராத சிறந்த பக்தியுடன் உலக நலன் பொருட்டுத் தன்னைச் சரணடையும் அடியவரைக் காக்கும் கருணையைப் பொழிவான்.
No comments:
Post a Comment