13 Jan 2025

திருவாசகம்



சோதியே சுடரே சூழொளி விளக்கே
   கரிகுழற் பணை முலை மடந்தை
    பாதியே பரனே பால்கொள் வெண்ணீற்றாய்
   பங்கயத்து அயனும் மால் அறியா
  நீதியே செல்வத் திருப்பெருந்துறையில்
    நிறை மலர்க் குருந்தம் மேவிய சீர்
   ஆதியே அடியேன் ஆதரித்து அழைத்தால்
 அதெந்துவே என்று அருளாயே.

        ஒளி வடிவானவனே, ஞாயிறு, திங்கள் என்னும் இரு சுடரானவனே, தன்னொளியுடைய விண்மீன்களாம் விளக்குகளானவனே, உமையவளின் திருமேனியில் பாதியைக் கொண்டவனே, பரமனே, பால் ஒக்கும் திருநீற்றை அணிந்தவனே, நான்முகனும் திருமாலும் அறியாத நீதி வடிவானவனே, சிறப்புமிகு திருப்பெருந்துறையின்கண் மலர் நிறைந்த குருந்த மரத்தடியின் கீழ் வீற்றிருந்த பெருமானே, அடியவன் உனை விரும்பியழைத்தால் அஞ்சாதே என்று உரைத்தருள்வாய்

No comments:

Post a Comment