கூறும் நாவே முதலாகக்
கூறுங் கரணம் எல்லாம் நீ
தேறும் வகை நீ திகைப்பு நீ
தீமை நன்மை முழுதும் நீ
வேறோர் பரிசு இங்கு ஒன்றில்லை
மெய்ம்மை உன்னை விரித்துரைக்கில்
தேறும் வகை என் சிவலோகா
திகைத்தால் தேற்ற வேண்டாவோ.
பாடலின் பொருள்
சிவலோக நாயகனே, நாக்கு முதலாகப் பேசப்படும் புறக்கருவிகள் எல்லாம் நீயே. நன்மையும் தீமையும் நீயே. அனைத்தும் நீயே (ஒன்றாயும் வேறாயும், உடனாயும் நிற்கும் தன்மை) என்னும் தெளிவைப் பெறாமல் நிற்கும் என்னைத் தேற்றியருள்க. மாயை எனும் திரை நீக்கி நின் திருவளைக் காணுமாறு அருளுக. என் திகைப்பை நீக்கித் தெளிவை அருள்தல் உன் கடன் அல்லவோ. உன் அருளை எதிர் நோக்கி நிற்கும் இந்த அடியவனைக் காத்தருள்வாய்.
No comments:
Post a Comment