தேவாரம்
செய்ஞ்ஞின்ற நீல மலர்கின்ற தில்லைச் சிற்றம்பலவன்
மைஞ்ஞின்ற ஒண்கண் மலைமகள் கண்டு மகிழ்ந்து நிற்க
நெய்ஞ்ஞின்று எரியும் விளக்கொத்த நீல மணிமிடற்றான்
கைஞ்ஞின்ற ஆடல் கண்டாற் பின்னைக் கண்கொண்டு
காண்பதென்னே.
வயல்களிலே நீலமலர்கள் மலர்கின்ற தில்லை. அங்கே சிற்றம்பலவாகிய பெருமான் மைபூசிய ஒளிமிக்க கண்களைக் கொண்டு பார்வதியை கண்டு மகிழ்ந்து நிற்கிறான். நெய் நிற்க எரிகின்ற விளக்கின் ஒளி போல நீல மணி போலும் கழுத்தை உடைய அப்பெருமானின் கை நின்று காட்டும் ஆட்டத்தை கண்ட பின்பு இக்கண்களால் காண்பதற்கும் ஒன்று உண்டா? இல்லையே!
No comments:
Post a Comment