தேவாரம்
நன்றுடையானைத் தீயதிலானை நரைவெள் ளேறு
ஒன்றுடையானை உமையொரு பாகம் உடையானைச்
சென்றடையாத திருவுடையானைச் சிராபப்ள்ளிக்
குன்றுடையானைக் கூற என்னுள்ளங் குளிரும்மே.
நன்மை உடையவனை, தீமையில்லாதவனை, வெண்மையான காளை வாகனம் உடையவனை, உமாதேவியை இடப்பாகம் கொண்டவனை, இயல்பாகவே செல்வத்தை யுடையவனை, திருச்சிராப்பள்ளி மலைமேல் இருப்பவனைப் போற்றி வழிபட என் உள்ளம் மகிழ்ச்சியடையும்.
No comments:
Post a Comment