28 Oct 2013

திருநாவுக்கரசர் சுவாமிகள் இடத்தில் விளங்கிய அற்புதங்கள்-Swami Thirunavukkarasar


1.  சமணர்களாலே ஏழுநாள் சுண்ணாம்பறையிலே பூட்டப்பட்டு இருந்தும்
   'மாசில் வீணையும்' என்ற பதிகம் பாடி வேகாது பிழைத்தது.

2.  சமணர்கள் கொடுத்த நஞ்சு கலந்த பாற்சோற்றை உண்டும் சாவாது
   பிழைத்தது.

3.  சமணர்கள் விடுத்த யானையினால் வலஞ் செய்து வணங்கப்பட்டது.

4.  சமணர்கள் கல்லிலே சேர்த்துக் கட்டிச் சமுத்திரத்தில் இடவும்,
   'சொற்றுணை வேதியன்' என்னும் திருப்பதிகம் பாடி அக்கல்லே
   தோணியாகக் கரை ஏறினது.



5.  இறையருளால் இடபக்குறியும் சூலக்குறியும் தோளில் பொறிக்கப்
   பெற்றது.

6.  அரவு தீண்டி இறந்த அப்பூதியடிகளின் மகனை 'ஒன்றுகொ
   லாமவர்'  என்ற பதிகம் பாடி உயிர்ப்பித்தது.

7.  சிவபெருமான் இடத்திலே படிக்காசு பெற்றது.

8.  வேதாரணியத்திலே வேதங்களாலே பூட்டப்பட்ட திருக்கதவு
   'பண்ணினேர் மொழியாள் உமை பங்கரோ' என்ற பதிகம் பாடி
   திறந்தது.

9.  காசிக்கு அப்பால் ஒரு தடாகத்தின் உள்ளே முழுகித்
   திருவையாற்றில் ஒரு வாவியின் மேலேத் தோன்றி கரை ஏறினது.


திருச்சிற்றம்பலம்.


No comments:

Post a Comment