28 Oct 2013

சுந்தரமூர்த்தி நாயனார் சுவாமிகள் இடத்தில் விளங்கிய அற்புதங்கள் - Interesting Facts About Sundramoorthi swami

சுந்தரமூர்த்தி நாயனார் சுவாமிகள் இடத்தில் விளங்கிய அற்புதங்கள்


1.  'நீள நினைந்தடி யேன்' என்ற திருப்பதிகம் பாடி இறைவனின்
        கட்டளைப்படி பூதகணங்கள் நெல் மலைகளைத் திருவாரூருக்குக்
   கொண்டு போய்ச் சேர்த்தது.

2.  தலையணையாக வைத்திருந்த செங்கற்கள் பொற்கட்டிகளாக மாறி
   பெற்றுக் கொண்டது.

3.  'வைத்தனன் தனக்கே தலையும் என் நாவும்' என்ற திருப்பதிகம் பாடி
   இறைவனிடம் பொருட்குவையினைப் பெற்றது.

4.  'மெய்யைமுற் றப்பொடிப் பூசியோர் நம்பி' எனத் தெடங்கும்
   திருப்பதிகம் பாடி சிவபெருமான் கொடுத்தருளிய பன்னீராயிரம்
   பொன்னை திருமுதுகுன்றம் எனப்படும் விருத்தாச்சலத்தில்
   உள்ள மணிமுத்தாற்றில் போட்டுத் திருவாரூர்க் கோவில்
   திருக்குளத்தில் 'பொன் செய்த மேனியினீர்' என்ற திருப்பதிகம்
   பாடி எடுத்தது.



5.  'ஆலந்தான் உகந்து அமுது செய்தானை' என்ற பதிகம் பாடி தான்
   இழந்த இடக்கண் பார்வையையும், 'மீளா வடிமை உமக்கே' என்ற
   பதிகம் பாடி தான் இழந்த இடக்கண் பார்வையையும பெற்றது.

6.  தன்னுடைய உயிரை மாய்த்துக் கொண்ட ஏயர்கோன்
   கலிக்காமரை இறையருளால் உயிர் பிழைக்க வைத்தது.

7.  பதிகம் பாடி பொன்னும் மணியும் பூண்ஆடை சாந்தம்
   முதலாயினப் பெற்றது.

8.  'பரவும் பரிசொன் றறியேன்' என்ற திருப்பதிகம் பாடி காவேரியாறு
   பிரிந்து வழிவிடச் செய்தது.

9.  'கொடுகு வெஞ்சிலை' என்ற திருப்பதிகம் பாடி இறையருளால்
   இழந்த நிதியத்தைத் திரும்பப் பெற்றது.


10. 'எற்றான் மறக்கேன் எழுமைக்கும் எம்பெரு மானையே' என்ற
   திருப்பதிகம் பாடி முதலை விழுங்கிய சிறுவனை அம்முதலை
   வாயினின்றும் அழைத்துக் கொடுத்தது.

11. வெள்ளை யானையில் ஏறிக் கொண்டு திருக்கயிலாசத்துக்கு
   எழுந்தருளியது.

திருச்சிற்றம்பலம்.

No comments:

Post a Comment