30 Jan 2025
28 Jan 2025
நாடகத்தால் உன் அடியார் போல் நடித்து நான் நடுவே
திருவாசகம்
நாடகத்தால் உன் அடியார்
போல் நடித்து நான் நடுவே
வீடகத்தே புகுந்திடுவான்
மிகப்பெரிதும் விரைகின்றேன்
ஆடகச் சீர் மணிக்குன்றே
இடையறா அன்பு உனக்கென்
ஊடகத்தே நின்றுருகத்
தந்தருள் எம் உடையானே.
என்னை உடையவனே, உனது அன்பர்கள் நடுவில், அன்பில்லாதவனான நான், அன்புடையவன் போல் வாஞ்சனையாக நடந்து காட்டி, அவர்களோடு யானும் முத்திபேறு அடைய மிக அதிகமாகத் துரிதப்படுகின்றேன். பொன் நிறம் பொருந்திய மாணிக்க மலை போன்ற ஐயனே, உன்பால் எப்போதும் குறைவுறாத அன்பினால் என் நெஞ்சம் உருக உதவியருள்க.
Labels:
திருவாசகம்
Subscribe to:
Posts (Atom)